விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்யும் நபர்களின் விவரங்களை கேட்க கூடாது: புதிய அரசாணை வெளியீடு

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (14:48 IST)
விபத்தில் உதவி செய்யும் நபர்களின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகளை விதித்து காவல்துறையினர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம்  புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


 

 
கடந்த 29.10.14 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கான பாதுகப்பு குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதற்கேற்றபடி 13.7.16 அன்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 
அதில், விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி உதவிசெய்பவர்கள் மற்றும் நேரடியாக பார்த்த சாட்சிகள் யாரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லலாம். அவர்களிடம் எந்தக்கேள்வியும் கேட்காமல் முகவரியை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல அனுமதிக்கவேண்டும்.
 
காப்பாற்றுவோருக்கு அரசு தக்க சன்மானம் வழங்க வேண்டும். இது விபத்தில் சிக்குபவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யும் ஆர்வத்தை தூண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்