சீர்திருத்த இல்லத்தில் இருந்த சிறுமி பலாத்காரம்! – பெண் ஊழியர்கள் கைது!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (12:51 IST)
உத்தரகாண்டில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க உதவிய இரண்டு பெண் ஊழியர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் குற்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்படுவது வழக்கம். அவ்வாறாக உத்தரகாண்டின் ஹல்த்வானி நகரில் சிறுமிகளுக்கான சீர்திருத்த இல்லம் ஒன்று நடந்து வரும் நிலையில் அதில் 15 வயது சிறுமி ஒருவர் இருந்துள்ளார்.

அந்த சிறுமியை சமீபத்தில் அங்கு வேலை செய்யும் தீபா மற்றும் கங்கா என்ற இரண்டு பெண்கள் வெளியே அழைத்து சென்றுள்ளனர். அங்கு சில மர்ம நபர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மீண்டும் சிறுமியை அவர்கள் சீர்திருத்த இல்லத்தில் வந்து விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் ரவீந்திர ரவுதலா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்ய வெளியே அழைத்து சென்றதும், உடந்தையாக இருந்ததும் தெரிய வந்ததால் பெண் ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வன்கொடுமை செய்த நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்