52 வயது பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் இளைஞர்! – கேரளாவில் அதிர்ச்சி!

ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (12:26 IST)
கேரளாவில் ரயில் நிலையம் செல்ல வழிக்கேட்ட 52 வயது பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் சமீபத்தில் வேலை காரணமாக கொச்சின் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து எர்ணாக்குளம் வந்த அந்த பெண் அங்கிருந்து சொந்த ஊர் செல்ல ரயில் நிலையம் செல்ல வேண்டி இருந்துள்ளது.

அப்போது அவ்வழியாக சென்ற அசாம் மாநில தொழிலாளியான ப்ரிடோஸ் அலி என்ற இளைஞரிடம் வழி கேட்டுள்ளார். அந்த பெண்ணை ரயில் நிலையம் அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்ற அலி ஆள்நடமாட்டமற்ற ஒரு இடத்திற்கு சென்றதும் அந்த பெண்ணை அங்கிருந்த புதருக்குள் தள்ளி தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவர் ஓடிவிட்ட நிலையில் காயமடைந்து கிடந்த அந்த பெண்ணை அப்பகுதியில் சென்ற சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் தப்பி ஓடிய அலியை கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்