டெலிவரி பாய் கெட்டப்பில் சென்ற ஸொமாட்டோ நிறுவன செயல் அதிகாரியை ஷாப்பிங் மால் ஊழியர்கள் அவமரியாதை செய்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் பெருநகரங்களில் உணவை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து சாப்பிடுவது ஒரு பழக்கமாக மாறியுள்ள நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவை அதிகரித்துள்ளது. அப்படியாக இந்தியாவில் பிரபலமாக உள்ள ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று ஸொமாட்டோ.
ஆனால் பொதுவாக பல நட்சத்திர உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் உணவு ஆர்டர் எடுக்க வரும் டெலிவரி பாய்களை கீழ்மையாக சிலர் நடத்துவதாகவும் சில புகார்கள் உள்ளன.
இந்நிலையில் ஸொமேட்டோ நிறுவன செயல் அதிகாரி தீபேந்திர கோயல் சமீபத்தில் டெலிவரி பாயாக மாறி ஒருநாள் மட்டும் உணவு ஆர்டர் எடுத்து டெலிவரி செய்துள்ளார். அப்படி ஒரு ஷாப்பிங் மாலில் உணவு ஆர்டர் எடுக்க சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை பொதுவழியை பயன்படுத்துவதற்கு தடை செய்ததுடன், லிஃப்டை பயன்பாடு இல்லாத மாடியில் ஏறி செல்ல சொல்லியிருக்கின்றனர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுள்ள தீபேந்திர கோயல் “எங்கள் ஊழியர்கள் நலனுக்காக மால்களுடன் நாங்கள் இன்னும் இணக்கமாக செயல்பட வேண்டும் என உணர்கிறேன். அதேநேரம் மால்களும் டெலிவரி ஊழியர்களிடம் மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்” என கருத்து தெரிவித்து அதுகுறித்து மக்களின் கருத்தையும் கேட்டுள்ளார்.
Edit by Prasanth.K