அந்த வகையில், அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 1-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தையும், 6-ம் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்த பேச்சுவாரத்தையில் தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் வடசென்னைக்கு பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பேச்சுவார்த்தை குழுவினரை, தேமுதிக பேச்சுவார்த்தை குழுவினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாகவும் இன்று தொகுதி உட்பட அனைத்தும் இறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.