தமிழகமும் கர்நாடகவும் ; இந்தியா பாகிஸ்தான் இல்லை – குமாரசாமி சுமூகம் ?

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (16:07 IST)
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகமும் தமிம்நாடும், இந்தியா - பாகிஸ்தான் போல விரோதிகள் இல்லை,  என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை 100 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டே வருகிறது. சமீபத்தில் உச்சநீதிமனறம் நதிநீர்ப் பங்கீடு குறித்து தீர்ப்பளித்த பின்னும் கர்நாடகா அதை பின்பற்ற மறுத்து வருகிறது. இதற்கிடையில் காவிரியி குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டவும் முடிவெடுத்துள்ளது. இதற்கான வரைவு மசோதாவிற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. ஆனால் கர்நாடகா அரசோ வேறு விதமாக காய்நகர்த்தி வருகிறது. கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களையும் பிரதமரையும் சந்தித்து வரைவுத் திட்ட அனுமதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதன் பின்செய்தியாளர்களிடம் பேசிய அவர்’ அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம தீர்வு காண வழிவகை செய்யுமாறு மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். எனவே இரு மாநில முதலவர்களுக்கு இடையிலான சந்திப்பு விரைவில் நடக்கும். கர்நாடாகவும் தமிழ்நாடும், இந்தியா பாகிஸ்தான் போல விரோதிகள் இல்லை. எனவே இதனை நாங்கள் பேசித் தீர்ப்போம். நீதிமன்றத்திற்கு சென்றால் வழக்கு முடியாமல் இழுத்துக்கொண்டே போகும். கடலில் கலக்கப்போகும் நீரை தடுத்துதான் மேகதாதுவில் அணைக் கட்டபோகிறோம்’ எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்