இந்நிலையில், தாஜ் மஹாலின் வெள்ளை நிறம் மாறாமல் இருக்க அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவின் விசாரணையின் போது, தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் தாஜ் மஹால் இழந்த வெண்மை நிறத்தை மீட்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால், தாஜ் மஹால் நிறம் மாறுவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது, அதனை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால், மாசு அதிக அளவில் தாக்குவதாலும், புற ஊதா கதிர்களின் தாக்கமும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.