துரோகிகளால் தாஜ் மஹால் கட்டப்பட்டு இருப்பதால், அதை வரலாற்று சின்னமாகவோ, நினைவு சின்னமாகவோ ஏற்க முடியாது எனவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தாஜ் மஹாலை கட்டியது துரோகிகள் என்றால் டெல்லி செங்கோட்டையையும் துரோகிகள்தான் கட்டியுள்ளனர். அதனால் அங்கு தேசியக் கொடியை ஏற்றுவதை மோடி நிறுத்துவாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
அடிமை சின்னங்கள் அழிக்கபட வேண்டும் என்றால் ஜனாதிபதி மாளிகை, செங்கோட்டை, பாராளுமன்ற கட்டிடம், குதுப் மினார் போன்றவையும் அழிக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது.