இந்த நிலையில், மணிஷ்க்கு உதவுவதற்காக அவரது தந்தை ஜெகதீஷ் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, மணிஷை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற நிலையில், அறுவை சிகிச்சை அறையிலிருந்து "மணிஷ்" என்று அழைக்கப்பட்டது.
தன் மகனைத் தான் அழைக்கிறார்கள் என்று, ஜெகதீஷ் "அவர் விரைவில் வந்து விடுவார்" என்று உள்ளே போய் சொல்ல முற்பட்ட போது, நான் அவரை பிடித்து படுக்கையில் உட்கார வைத்து, அவரிடம் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினார்.
"தான் நோயாளி அல்ல, தனது மகனுக்கு தான் நான் அறுவை சிகிச்சை" என்ற ஜெகதீஷ் சொல்ல வந்த போது, அவரால் திடீரென பேச முடியவில்லை. அதற்குள் கை அறுக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கான பணி தொடங்கிய போது, தான் இன்னொரு மருத்துவர் வந்து "இவர் நோயாளி அல்ல" என்று சொன்ன பிறகு, அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டு, அவரது கையில் தையல் போடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, நோயாளி யார் என்று கூட உறுதி செய்யாமல் அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த மருத்துவ கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.