கர்நாடக அரசுக்கு இரண்டாவது அடி: உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (12:24 IST)
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


 

 
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 
அதேநேரத்தில் இடைக்கால உத்தரவாக, கடந்த 5ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினசரி 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசும் தண்ணீரை திறந்துவிட்டது. அதேநேரம், காவிரி நீரை திறந்துவிட பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில், உச்ச  நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்ய்ப்பட்டது.
 
அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வருகிற 20ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு, கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.
அடுத்த கட்டுரையில்