கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

Siva
திங்கள், 3 பிப்ரவரி 2025 (14:37 IST)
மகா கும்பமேளாவில் கடந்த அமாவாசை தினத்தில் புனித நீராட சென்ற பக்தர்கள் சிலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று கோரி, பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
 
கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மாநில அரசுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க கோரப்படுகிறது என்றும், பக்தர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பான மனு ஏற்கனவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், அந்த மனுவை தற்போது உச்ச நீதிமன்றம் விசாரித்து சரியாக இருக்காது என்றும் கூறிய நீதிபதிகள், இது ஒரு துரதிஷ்டமான சம்பவம் எனக் குறிப்பிட்டனர். இதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரரை நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்