மம்தா பானர்ஜியின் ஆதார் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அறிவுரை

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (11:33 IST)
ஆதார் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க அரசு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது



 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து மாநில அரசு வழக்கு தொடர முடியாது என்று கருத்து கூறிய சுப்ரீம் கோர்ட், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பெயரில் வழக்கை தொடரலாம் என்று அறிவுரை கூறியுள்ளது.
 
மாநில அரசின் சார்பில் வழக்கு தொடராமல், முதலமைச்சர் என்ற வகையிலோ அல்லது தனிநபர் என்ற வகையிலோ மம்தாபானர்ஜி வழக்கு தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளதால் மம்தா பானர்ஜி விரைவில் தனது பெயரில் வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்