சுப்ரீம் கோர்ட்டுக்கு சீல் வைத்த போலீஸார்...

வியாழன், 26 அக்டோபர் 2017 (18:38 IST)
கென்யா நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியம் குழப்பத்தால் கென்யா நாட்டு போலீஸார் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்டுக்கு தடை விதித்துள்ளனர்.


 
 
கென்யா நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றார். 
 
ஆனால் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
 
இதையடுத்து இன்று மறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி துக்கின.
 
மேலும், இது குறித்து மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க தயாரானபோது, கோர்ட்டுக்கு போலீஸார் திடீரென சீல் வைத்தனர். 

மேலும், அங்கு கலவர தடுப்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்