மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

சனி, 28 அக்டோபர் 2017 (11:10 IST)
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பகிரங்கமாக எதிர்த்து வந்தவர் மம்தா பானர்ஜி.  தற்போது ஆதார் கட்டாயமாக்கபடுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.


 
 
சமுக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மம்தா பானர்ஜி.
 
அனைத்து அரசு சேவைகளுக்கு ஆதாரை கட்டாயபடுத்தி வரும் மோடி அரசு அடுத்து மொபைல் போன் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது.
 
இதனை தொடர்ந்து தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலமாக இதனை நிஐவு படுத்தி வருகிறது.
 
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எனது போன் வேலை செய்யாவிட்டலும் சரி ஆதாரை கட்டாயமாக்க முடியாது என்று அதிரடியாக தெரிவித்து இருந்தார்.
 
தற்போது மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்