விவசாயிகளுக்கு ஆதரவு....மத்திய அரசின் விருதை திருப்பிக் கொடுத்த முதல்வர்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (21:44 IST)
டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் பிரமாண்ட போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் பெற்ற பத்ம விபூஷன் விருதை திருப்பியளித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் 8வது நாளாகப் போராடி வருகின்றனர்.

இன்று 4 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளை அழைத்தது. அப்போது அவர்களுக்கு மதியவுணவு கொடுத்தது. ஆனால் அவர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனக்கு மத்திய அரவு அளித்த பத்ம விபூஷன் விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

மேலும் பாஜகவுடனான கூட்டணியை முதல்வரின் கட்சியான சிரோமணி அகாலிதளம்  முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்