மே 14ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அறிவிக்க பெட்ரோலியம் டீலர் அமைப்பு முடிவு செய்துள்ளது.
எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை அடிப்படையில் மே 14ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் செயல்படாது என Consortium of India Petroleum Dealers அமைப்பின் தலைவர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பெட்ரோல் டீலர்கள் இதற்கு ஒப்புதலும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் அனைத்தந்திய பெட்ரோலிய டீலர் சங்கமோ இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.
எனவே வாகன ஓட்டிகள் மத்தியில் இது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரப்பூர்வ தெளிவான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.