அதிகரிக்கும் கரும்பூஞ்சை தொற்று; நீரிழிவு நோயாளிகள் இலக்கா?

செவ்வாய், 25 மே 2021 (09:47 IST)
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கருப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை இந்தியாவில் 4,556 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 55 சதவீதம் நோயாளிகள் நீரிழிவு நோய் உள்ளவர்களாக இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று குறித்த முன்கூட்டிய நடவடிக்கைகள் தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்