மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு! – பாதிப்பு நிலவரம் என்ன?

ஞாயிறு, 23 மே 2021 (10:10 IST)
இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலமான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று காலை 6.54 மணியளவி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாகாணத்திலிருந்து 49 கி.மீ கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் உருவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 109 கி.மீ சுற்றளவிற்கு உணரப்பட்டது.

இதனால் கட்டிடங்கள் மெதுவகா குலுங்கிய நிலையில் மக்கள் பயந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ரிக்டர் அளவில் 4.3 என்ற குறைந்த அளவிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்