தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (11:51 IST)
மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில் அவரின் உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் ஏதுவும் வெளிவரவில்லை.
 
இதனால் முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தமிழகத்துக்கு தற்காலிக முதலமைச்சர் வேண்டும் வலியுறுத்தினர்.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
 
தமிழ்நாட்டில் ஜனாதிபதி அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இதன்மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா முழு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியும். இந்தியாவில் சட்ட ஒழுங்கின் நிலை மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்