உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Mahendran

சனி, 28 செப்டம்பர் 2024 (16:30 IST)
நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும் முதல்வரிடம் உள்ள ஒரு துறை அவருக்கு ஒப்படைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார் என்று திமுக வட்டாரங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், நாளை அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
மேலும், எந்த ஒரு சீனியர் அமைச்சர்களிடமிருந்து துறைகள் பறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப் போவதில்லை என்றும், இப்போதைக்கு உள்ள விளையாட்டு துறை மட்டுமே போதும் என்ற உதயநிதி ஸ்டாலின் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
ஆனால் அதே நேரத்தில், முதல்வர் வசம் உள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை உதயநிதிக்கு கூடுதலாக வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு, நாளை அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி தரப்படும் என்றும், அவருக்கு மின்சார துறை மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்