மக்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் நீர்நிலைகளில் இருந்து 30 மீட்டர் தொலைவில் சுடுகாடு அமைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நில உரிமையாளர்கள் ரூபாய் 25 ஆயிரம் செலுத்தி உரிமை பெற வேண்டும் என்றும், ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் குடிநீர் வசதி, வாகனம் நிறுத்தும் இடம், சிசிடிவி கண்காணிப்பு, ஓய்விடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்றும், நாய் உள்ளிட்ட விலங்குகள் நுழையாமல் தடுக்க, சுற்றுச்வர் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட சில வழிகாட்டி நெறிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.