பிரதமர் மோடிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக தற்போது நான் பிராயசித்தம் தேடுகிறேன் என பாஜக பிரமுகர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்பருக்கு பீர்பால் இருந்தது போல், மோடிக்கு நான் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இதற்காக என் மீது அவர் கோபம் அடைந்தார்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கு பிரச்சாரம் செய்ததற்காக தற்போது நான் மிகவும் வருந்துகிறேன். அதற்கான பரிகாரம் செய்ய உள்ளேன். மோடி எப்படிப்பட்ட பொய்யர் என்பது எனக்கு தெரியும். “15 நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவேன்” என்று கூறியது, இதற்கான ஒரு உதாரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மோடியின் அழைப்பை ட்ரம்ப் மூன்றாவது முறையாக ஏற்றார் என்று கூறுகிறார்கள். ஆனால், முதல் இரண்டு அழைப்புகள் யாருடையது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். விரைவில், ட்ரம்பின் ஷூவை துடைக்க அனுமதி கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறலாம் என்றும் அவர் கடுமையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.