மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் உ.பியில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (15:37 IST)
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியில் இன்று 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
உ.பி மாநிலத்தில் கஸ்தூரிபா காந்தி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று வழக்கம்போல் மத்திய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்தது.
 
இந்நிலையில், உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இவர்கள் சாப்பிட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்