ஒன்றரை வயது குழந்தையை கடித்துக் குதறி கொலை செய்த தெரு நாய்கள்

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (12:40 IST)
சண்டிகரில் ஒன்றரை வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தெரு நாய்க்கள் தாக்கி குழந்தைகள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
 
சண்டிகரில் உள்ள பல்சோரா பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை ஒன்றரை வயது குழந்தை சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் சிறுவர்களை தாக்க தொடங்கின. நாயை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். 
 
ஆனால் அந்த ஒன்றரை வயது குழந்தை மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டது. குழந்தையை அந்த நாய்கள் கடித்துக் குதறியது. அங்கிருந்தவர்கள் நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்