வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல்..இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

திங்கள், 23 அக்டோபர் 2023 (10:17 IST)
வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் வடகிழக்கு இந்தியா மற்றும் வங்கதேசத்தைப் பாதிக்கும் என்றும், புயலின் தாக்கத்தால், கனமழை, கடல் அலைகள் உயரும், காற்று வேகமாக வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளம்,  ஒடிசா,  அசாம்,  மணிப்பூர்,  நாகாலாந்து,  மிசோரம்,  திரிபுரா,* வங்கதேசம் ஆகியவை புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்