தீவிர புயலாக வலுப்பெற்றது தேஜ்! தமிழ்நாட்டிற்கு பாதிப்பா?

சனி, 21 அக்டோபர் 2023 (17:13 IST)
அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதாகவும், இந்த புயல் வரும் 25ம் தேதி ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்கும் என்றும், ஆனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு இந்த புயலால் எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேஜ் புயல் வடகிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டு, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இந்த புயால் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வரை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
அரபிக் கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதால் ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் அக்டோபர் 26ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம்
என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்