வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு..!

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (08:52 IST)
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கொண்டு  ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 
 
வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதால் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் உள்ள கரையோர மாவட்டங்களில் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் படியும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்