சூப்பர் புயலாக உருமாறுகிறது “தேஜ்”! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (11:27 IST)
அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் தற்போது சூப்பர் புயலாக வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தென்மேற்கு பருவமழை காலம் முடிய உள்ள நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு தேஜ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் தேஜ் புயல் தற்போது சூப்பர் புயலாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அக்டோபர் 24ல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. ஒரே சமயத்தில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இரு பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்