வங்க கடலில் தாழ்வு மண்டலம்.. 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

திங்கள், 23 அக்டோபர் 2023 (08:52 IST)
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது மாறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மவாட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்