கரூர் : மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு:

திங்கள், 9 ஜனவரி 2023 (22:14 IST)
கரூர் மாவட்டத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனு:
 
கரூர் மாவட்டம் காவேரி ஆற்றில் நெரூர் வடக்கு மல்லம்பாளையத்தில் புதிய மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அதேபோல நன்னியூர் பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பு சேர்ந்த நிர்வாகிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 
பின்னர் செய்தியாளர்கள்  சந்திப்பில் மணல் குவாரி அமைய உள்ள இடத்தில் விவசாயக் கிணறுகள் மற்றும் கரூர்-நாமக்கல் செல்லும் ரயில் பாதை அமைந்துள்ளது,அதேபோல நெடுஞ்சாலை துறை சொந்தமான பாலங்களும் அமைந்துள்ளது, எனவே இந்த இடத்தில் மணல் குவாரி அமைத்தால் அப்பகுதியில் ஆபத்து விளைவிக்கும்,மேலும் வாங்கல் பகுதியில் காப்பு காடுகள் அமைந்துள்ளன.
 
ஏற்கனவே அப்பகுதியில் மணல் எடுக்கப்பட்டு அப்பகுதியில் விலை  முதர் மண்டி அமைந்துள்ளது.
 
எனவே அப்பகுதியில் மணல் எடுத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.
 
மேலும் இந்த இடத்தில் மணல் குவாரி அமைக்க ஈடுபட்டால் நீதிமன்றத்தின் நாடி வழக்கு தொடர்ந்து தடையானை பெற உள்ளோம் என்று தெரிவித்தார்.
 
பேட்டி: குணசேகரன் - சமூக அலுவலர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்