தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணாவை அடுத்து இன்னொரு மகன் சூரஜ் ரேவண்ணா கைது!

Siva
ஞாயிறு, 23 ஜூன் 2024 (09:40 IST)
கர்நாடக மாநில முன்னாள் எம்பி பிரஜுவல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகிய இருவரும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரஜ்வல் ரேவண்ணா சகோதரர் சூரஜ் ரேவண்ணாவும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் ரேவண்ணா மகன் சூரஜ் ரேவண்ணா சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தர அணுகியபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சூரஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே சூரஜ் சகோதரர் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைதாக சிறையில் உள்ளார் என்பதும் அதேபோல் பெண் கடத்தல் வழக்கில் இவர்களது தந்தை ரேவண்ணா கைதாகி ஜாமீன் பெற்றுள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது ரேவண்ணாவின் இன்னொரு மகனும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்