பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!

Mahendran

செவ்வாய், 18 ஜூன் 2024 (12:09 IST)
பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கபப்ட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. மேலும் தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
 
அதுமட்டுமின்றி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மே 31-ஆம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தார். விசாரணைக்கு பின் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்