இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் சர்ச்சை எழுந்தது. அவர் பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதை அடுத்து வெளிநாடு தப்பி சென்ற அவர், சமீபத்தில் இந்தியா வந்து நேரில் சரணடைந்தார்.
இந்நிலையில் ஹாசன் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார். பிரஜ்வல் ரேவண்ணா மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 339 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் எம் படேல் 6 லட்சத்து 72 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்று 42 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஹாசன் என்பது முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் தலைவருமான தேவகவுடாவின் சொந்த மாவட்டமாகும். மேலும் ஹாசன் தொகுதி எப்போதுமே ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக தான் இருந்து வருகிறது. 2004, 2009, 2014 தேர்தல்களில் தேவகவுடா இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.