சோனியா காந்தி திடீர் வெளிநாட்டு பயணம். எந்த நாட்டுக்கு சென்றார் என்ற மர்மம் விலகுமா?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (01:03 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி காணப்படும் காரணத்தால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் தனி விமானம் மூலம் திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது கட்சியின் மூத்த தலைவர்களுக்கே தெரியவில்லை என்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


கடந்த முறை சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்காவுக்கு சென்றதால் இம்முறையும் அவர் அமெரிக்கா சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சோனியா காந்தி நாடு திரும்பும் வரை அவரது மகனும் காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல்காந்தி கட்சி பணிகளை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்