மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சோனியா காந்தி

புதன், 11 ஜனவரி 2023 (19:42 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்றினால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிதிது வந்தனர்.

சில நாட்களுக்குப் பின் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்,

அதன் பின்னர், சோனியா காந்தி நேற்று மாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்