இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! – சோனியா காந்தி செயலாளர் மீது வழக்கு!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (10:30 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனி செயலாளராக பணியாற்றி வருபவர் 71 வயதான பி.பி மாதவன். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்த புகாரில் பெண்ணின் கணவர் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி பேணர் வைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். சில ஆண்டுகள் முன்னதாக அவர் உயிரிழந்துவிட்ட நிலையில் வேலை கேட்டு அவரின் மனைவி பி.பி.மாதவனை நாடியுள்ளார். அந்த பெண்ணை முதலில் நேர்காணலுக்கு அழைத்த அவர் பின்னர் வீடியோ அழைப்பு, சாட்டிங் மூலமாகவும் பேசியுள்ளார்.

பின்னர் உத்தம் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் வலுக்கட்டாயமாக அழைத்து என்று வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்