சோனியா காந்தியை சந்திக்க திரெளபதி முர்மு திட்டம்!

வெள்ளி, 24 ஜூன் 2022 (14:16 IST)
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு இன்று குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தாக்கல் செய்தார்
 
பிரதமர் மோடி உள்பட பல பாஜக பிரபலங்கள் அவரை வழிமொழிந்த நிலையில் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் 
 
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் சரத்குமார் ஆகியோரை சந்திக்க திரெளபதி முர்மு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 ஏற்கனவே மம்தா பானர்ஜி தலைமையிலான 17 கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா  போட்டியிட உள்ள நிலையில் சோனியா காந்தியிடம் திரௌபதி முர்மு ஆதரவு கேட்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்