ஏகே 47 துப்பாக்கிக் குண்டு வேகத்தில் பொய் சொல்கின்றனர் –மோடி வேதனை

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (10:47 IST)
சில எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜக வின் மீதும் தன் மீதும் எந்தவித ஆதாரமும் இன்றி பொய்வாரி தூற்றி இரைக்கின்றனர் என்று இந்தியப் பிரதமர் போடி தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் ரபேல் ஊழல் விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இன்னும் 6 மாத காலத்தில் தேர்தல் வர இருப்பதால் எதிர்க்கட்சிகள் தற்போது தங்கள் தேர்தல் ஆயுதமாக எடுத்து பேசி வருகின்றனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் ரபேல் ஊழலை புள்ளி விவரஙக்ளோடு விளக்கி கூறிவருகிறார். அவர் சொல்லும் ஊழல் விவரங்கள் பொது மக்களை வாயில் கை வைத்து ஆச்சர்யப்படும் அளவில் உள்ளன.

இதனால் பாஜக தலைமை ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. எனவே இது சம்மந்தமாக பிரதமர் மோடி தற்போது பொதுமக்களிடம் விளக்கமளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற அவர் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.

அப்போது ‘சில தலைவர்கள் பொய் இயந்திரங்களைப் போல பொய்களைக் கூறி வருகின்றனர். அவர்கள் வாயைத் திறக்கும் போதெல்லாம் ஏ.கே. 47 துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் குண்டுகளின் வேகத்தில் பபொய்கள் வெளிவருகின்றன. ஆனால் எனக்கு எதிக்கட்சிகளைப் பற்றிக் கவலை இல்லை. ஏனென்றால் மக்கள் என்னை நம்புகின்றனர். அது போல பாஜ்க தொண்டர்களும் உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்