சமூக வலைதளங்களின் வருகையால் அச்சு ஊடகங்கள் பெரிய அளவில் விளம்பர வருவாயை இழந்துள்ளன. அவர்கள் முதலீடு செய்து செய்தியாளர்கள் மூலம் செய்தி சேகரித்து மக்களுக்கு செய்தியை அளிக்கின்றன. இந்த தகவல்களை கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், அந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால் பெரிய அளவில் விளம்பரங்கள் இப்போது சமூகவலைதளங்களுக்கு சென்றுள்ளன.
இதனால் சமூகவலைதளங்கள் தாங்கள் பயன்படுத்தும் செய்திகளுக்கு, அச்சு ஊடகங்களுக்கு கட்டணம் செலுத்தும் விதமாக சட்டம் கொண்டுவரவேண்டும் என பாஜக எம்பியும் முனனள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதுபோன்ற சட்டம் ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.