அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இங்கு உள்ள 60 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் 34 தொகுதிகளில், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தி உள்ளன
வேட்பாளர்களை திரும்ப பெற வரும் 30ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 41 இடங்களிலும், ஜே.டி.யு 7 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.