மோடி, அண்ணாமலை உள்பட பாஜக தலைவர்களை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் விழுப்புரத்தில் இன்று நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜகவுக்கு இன்று நான்கு எம்எல்ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் மோடியும், அதானியும் அம்பானியும் தான் நன்றாக இருக்கிறார்கள் என்றும் ஏழை எளிய மக்கள் நன்றாக இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு கூஜாதான் என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.