கேரள சினிமாவில் பிஸியான ராப் பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் வேடன். அவர் சினிமா தவிர்த்து அரசியல் கருத்துகளை –குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் போராட்டங்கள் மற்றும் எழுச்சியையும் பாடி வருகிறார்.
சமீபகாலமாக அவரின் புகழ் கேரளா தாண்டியும் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதியான திருமாவளவன் அவரை வீடியோ காலில் அழைத்துப் பேசி பாராட்டினார். இதனால் தமிழகத்தில் கவனிக்கப்படும் ஆளுமையாக ஆகியுள்ளார் வேடன்.
இந்நிலையில் அவர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் GS (கோலி சோடா மூன்றாம் பாகம்) படத்தில் பாடகராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் வேடன் இரண்டு பாடல்களைப் பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.