பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு செம நியூஸ்: 600 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (10:05 IST)
பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கஷ்டமான காலமாக இருந்த நிலையில் தற்போது தான் மீண்டும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இருப்பினும் நேற்று பங்கு சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் இன்று சுமார் 600 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 600 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 56 ஆயிரத்து 416 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 160 புள்ளிகள் உயர்ந்து 16800 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அமெரிக்க பெடரல் வங்கி 75 புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ள நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்