பழிதீர்க்கும் படலத்தில் கேரள மக்கள்: எம்.எல்.ஏ வீட்டில் வெடிகுண்டு வீச்சு

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (11:56 IST)
சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மர்மநபர்கள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் போராட்டங்களையும் எதிர்ப்பையும் மீறி  கடந்த 2ஆம் தேதி கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் சபரிமலைக்குள் சென்று தரிசனம் செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலர் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏவான சம்ஷீரின் வீட்டில் நேற்று நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். இதுசம்மந்தமாக போலீஸார் 20 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்