சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை அடுத்து ஒருசில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றபோதிலும் பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்வோம் என பெண்கள் அமைப்புகள் சில போராடி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோடிக்கணக்கான மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் கேரள அரசு நடந்துகொண்டுள்ளது. ஒரு மத்திய அமைச்சரை கோவிலுக்குள் அழைத்து செல்ல முடியாத காவல்துறை 2 பெண்களை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளது. இது கேரள அரசின் உச்சகட்ட அராஜகம். இனி மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என தமிழிசை கூறினார்.