திடீரென 1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:51 IST)
பங்கு சந்தை நிலவரம் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென சுமார் 1000 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 950 புள்ளிகள் குறைந்து 57 ஆயிரத்து 892 என்ற விலையில் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 60 ஆயிரத்துக்கும் மேல் சென்செக்ஸ் இருந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையான நிப்டி  270 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்தது 17280 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
திடீரென சுமார் 1000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்துள்ளதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பங்குச் சந்தை இன்று மாலைக்குள் ஓரளவு மீண்டு விடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்