500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மீண்டும் குஷி!
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (09:30 IST)
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
குறிப்பாக நேற்று 300 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் சரிந்ததால் கலக்கத்தில் இருந்த முதலீட்டாளர்கள் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதை அடுத்து குஷியில் உள்ளனர்.
மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 255 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 145 புள்ளிகள் அதிகரித்து 17665 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச் சந்தை வர்த்தகம் இன்னும் சில நாட்களுக்கு ஏற்றத்தில் தான் இருக்கும் என்றும் அதனால் தைரியமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்