31 பைசா கடன் பாக்கி...என்.ஓ.சி வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கி

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:01 IST)
குஜராத்தின் 31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயின் நிலத்தை விற்பதற்கு என்.ஓ.சி வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத்  மாநிலம் அகமதாபாத் அருகேயுள்ளா கோராாஜ் என்ற கிராமத்தில் வசிப்பவர் சாம்ஜிபாய்.இவரிடம் இருந்து ராகேஷ் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும்  நிலம் வாங்கியிருந்தனர்.

ஆனால் வருவாய்த்துறை பதிவேட்டைல் பெயர் மாற்றம் செய்யமுடியவில்லை.  சாம்ஜிபாய் அந்த இடத்தைக்காடி ரூ.3 லட்சம் பயிர்க்கடன் வாங்கியதுதான் காரணம் எனக் கூறப்பட்டது.எனவே அந்தக் கடன் தொகையை முழுவதுமாகச் செலுத்திவிட்டு நிலத்தை விற்க முயற்சித்தார் சாம்ஜிபாய். இருப்பினும் அவருக்கு தடையில்லா சான்று வழங்க எஸ்.பி.ஐ அதிகாரிகள் மறுத்தனர்.

இதனால் நிலம் வாங்கியவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். கடனை விவசாயி திருப்பிச் செலுத்தியதால்  உரிய சான்றிதழ் தரும்படி வங்கியின் தரப்பு வக்கீலிடம் நீதிமன்றம் கூறியது.

இதற்கு மறுப்புத்தெரிவித்த எஸ்பியை தரப்பு வக்கீல் விவசாயி மேலும் 31 பைசா கடன் பாக்கிவைத்துள்ளார் என கூறனார். அதைச் செலுத்தினால்தான் கணிணியால் பராகரிக்கப்படும் கடன் பிணையில் இருந்து விடுபடமுடியும் எனக் கூறினார்.

இதைக்கேட்டு அதிருப்தி அடைந்த நீதிமன்றம் 50 பைசாவுக்குகீழே உள்ள  கடன் பாக்கியை கணக்கில் எடுக்கத் தேவையில்லை எனக் கூறி  விவசாயியை மேலும் துன்புறுத்தக்கூடாது என எச்சரித்து இந்த வழகை வரும் மே 2 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி  முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குககளை விசாரிப்பதற்காக வாரத்திற்கு 4 நீதிபதிகள் வீதம்  21  நீதிபதிகள் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்