அடங்காத ரஷ்யா; உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் இழப்பு! – உலக வங்கி தகவல்!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (15:04 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் பொருளாதார ரீதியாக கடும் வீழ்ச்சியை உக்ரைன் சந்தித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல நாட்களாகியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலினால் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அகதிகளாக அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பல உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலுமே பல ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதால் உக்ரைனின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலான உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உக்ரைன் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனுக்கு தேவையான நிதி உதவிகளை உலக வங்கி குறுகிய கால சேத மதிப்பீட்டின் கீழ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்