காங்கிரஸில் இணைந்த சத்ருகன் சின்ஹா: கலக்கத்தில் பாஜக

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (14:03 IST)
பாஜக முன்னாள் எம்.பி. சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் இணைந்தது அந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் பாஜக எம்.பியுமான சத்ருகன் சின்ஹா பாஜக தலைமை மீதும் கட்சியினரிடையும் நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்தார். அவ்வப்போது தனது கட்சியினருக்கு எதிராக பேசி வந்தார். கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை தற்போதுள்ளவர்கள் ஏற்க மறுப்பதாகவும், அது ஜனநாயகத்திற்கு சரியல்ல எனவும் கூறியிந்தார்.
 
இந்நிலையில் அவர் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால், ரன் தீப் சுர்ஜிவாலா முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளார். ஏற்கனவே அத்வானி பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பாஜகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்